

சிதம்பரம் புறவழிச்சாலையில் முளைத்தநெற்பயிருடன் விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட் டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் அறு வடைக்கு தயாராக இருந்த சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இத னால் வயல்களில் நெற்கதிர்கள் முளைத் துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன், முளைத்த நெற் பயிருடன் சிதம்பரம் புறவழிச்சாலையில் அமர்ந்தனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், மறுகணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
சிதம்பரம் முன்னாள் நகர் உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். காவிரிடெல்டா பாசன சங்கங்களின் கூட்டமைப் பின் தலைவர் இளங்கீரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தியாகராஜன், சம்பந்த மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் விவசாயிகளிடம் சமாதா னம் பேசினர். ஆனால் சார்- ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் நேரில் வந்துபதில் அளித்தால் மட்டுமே போராட் டத்தை வாபஸ் பெறமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் வராததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் சாலையில் படுத்து வர மறுத்தனர்.
சிதம்பரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.