மதுரையில் விரைவில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம்  விருதுநகர் எம்பிக்கு மத்திய அரசு தகவல்

மதுரையில் விரைவில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் விருதுநகர் எம்பிக்கு மத்திய அரசு தகவல்

Published on

மதுரையில் மல்லிகைப் பூ ஏற்றுமதி மையம் அமைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.

இது குறித்து அவர் மதுரை திருநகர் மற்றும் விருதுநகரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தொடர் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சிவகாசியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டபோது, மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதியளித்தார்.

மதுரை மல்லிகையை உலக அளவில் கொண்டு செல்வதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்று மக்களவையில் வலியுறுத்தினேன். அதற்குப் பதில் அளித்த மத்திய நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் எனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மல்லிகை மலர் பொருட்கள் ஏற்றுமதி மையம் அமைக்கும் பணியை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது. மதுரை மல்லிகையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசோடு இணைந்து மாநில அரசு திட்டம் வகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in