

கெங்கவல்லி அருகே வாய்க்கால் நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றொருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
கெங்கவல்லி அடுத்த வலசக்கல்பட்டி கிராமத்தில் உள்ள ஏரி உபரிநீர் வாய்க்காலில்கடம்பூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா என்பவர் தனது பேத்திகள் தேவி (11), தீபா ஆகியோரை நீச்சல் பழக அழைத்துச் சென்றார். வாய்க்காலில் சிறுமிகள் இருவரும் நீச்சல் பழகியபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கினர். அவர்களில் தீபாவை சின்னபாப்பா மீட்டார். தேவியை மீட்க முடியவில்லை.
இதேபோல, வாய்க்காலின் மற்றொரு பகுதியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த பைத்தூர் நைனார்பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய ஒயர்மேன் அண்ணாமலை என்பரும் நீரில் மூழ்கினார்.தகவல் அறிந்த அங்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் நீரில் மூழ்கியவர்களை தேடியபோது, உயிரிழந்த நிலையில் அண்ணாமலையின் உடலை மீட்டனர். சிறுமியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.வலசக்கல்பட்டி வாய்க்காலில் குளிக்கக்கூடாது என அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும், அதில் ஏராளமானோர் குளிப்பதால் இதுபோன்ற விபரீதம் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.