குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையம் மூலம் ‘உதயம்’ சான்றிதழ் பெறலாம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்   இணையம் மூலம் ‘உதயம்’ சான்றிதழ் பெறலாம்
Updated on
1 min read

திருவள்ளூர் ஆட்சியரின் செய்திக்குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக, தற்போது மத்திய அரசு உதயம் சான்றிதழை அறிமுகம் செய்துள்ளது.

2020 ஜுன் 30-ம் தேதிக்கு முன்புபெறப்பட்ட உத்யோக் ஆதார் பத்திரம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது. எனவே, அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் www.udyamregistration.gov.in என்ற இணையதளம் மூலம் வரும்மார்ச் 31-க்குள் உதயம் சான்றிதழை இணையம் வழியே பதிவுசெய்து கொள்ளலாம். தகவலுக்கு பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், சிட்கோ தொழில்பேட்டை, காக்களுர், திருவள்ளூர் என்ற முகவரியில் அணுகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in