உதயநிதி ஸ்டாலினை கண்டித்துசங்கரன்கோவிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்துசங்கரன்கோவிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மற்றும் பெண்கள் குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாகக் கூறியும், அதற்காக அவரை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது, “ஜெயலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வரையும், பெண்களையும் கண்ணியக்குறைவாக பேசிய உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் ” என்றார்.

நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in