Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM
புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் தமிழரசன்(23), மகள் பார்கவி(22). இவர்கள் இருவரும் நேற்று வீட்டில் மொட்டை மாடிக்கு இரும்புக் கம்பியை தூக்கிச் சென்றனர். அப்போது, அவ்வழியே சென்ற மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே 2 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கணேஷ் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT