

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமம் பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செந்தாமரை. இவரது குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இதையடுத்து அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். அப்போது அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.