கூழமந்தல் ஏரிக்கரையில் ஜன. 16-ல் நட்சத்திர விநாயகர் கோயிலில் கோ பூஜை

கூழமந்தல் ஏரிக்கரையில் ஜன. 16-ல் நட்சத்திர விநாயகர் கோயிலில் கோ பூஜை
Updated on
1 min read

இந்த நட்சத்திர திருக்கோயிலில் வழக்கமாக ராகு, கேது, சனீஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கம் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உலக மக்களின் நன்மையை கருதியும், இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்கள் பெருக வேண்டியும், மகா லட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டியும் 5-ம் ஆண்டாக இக்கோயிலில் கோ பூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விநாயகருக்கு 16 வகையான தீப, தூப ஆராதனைகளும், காலை 11 மணிக்கு 108 பசுக்கள் மற்றும் கன்றுகளை அழைத்து வந்து கோ பூஜையும் நடைபெறும். விருப்பமுள்ள பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து இந்த் கோ பூஜையில் பங்கேற்கலாம் என இக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in