மின் கம்பியில் துணியை காயப்போட்டவர் உயிரிழப்பு

மின் கம்பியில் துணியை காயப்போட்டவர் உயிரிழப்பு

Published on

முஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (47). விவசாயி. நேற்று இவர் குளித்துவிட்டு துண்டை வீட்டுக்கு வரும் மின்சார ஒயரில் காயப்போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ராமு மயங்கி விழுந்தார்.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராமு உயிரிழந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து முஷ் ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in