

கடலூரில் டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலா ளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் டாஸ்மாக் குடோனில் 60-க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கூலி யாக பெட்டி ஒன்றுக்கு ரூ. 1.20 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கூலியை தான் இவர்கள் பெற்று வருகின்றனர். பெட்டி ஒன்றுக்கு ரூ. 3.50 வழங்கக்கோரி நேற்று கூலிஉயர்வு வழங்கக்கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் டாஸ்மார்க் மேலாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வரும் 31-ம் தேதிக்குள் டெண்டர் விடுவது எனவும் பிப்ரவரி 1-ம் தேதி அன்று கூலி உயர்வு சம்பந்தமாக பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.இதனடிப்படையில் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
இப்போராட்டத்தில் சிஐடியூ மாவட்ட செயலாளர் கருப்பையன், மாவட்ட இணை செயலாளர் சுப்புராயன், சிஐடியூ டாஸ்மாக் சுமைப்பணி சங்க தலைவர் முருகன், செயலாளர் தண்டபாணி மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூலியாக பெட்டி ஒன்றுக்கு ரூ. 1.20 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கூலியை தான் இவர்கள் பெற்று வருகின்றனர்.