Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

போடிமெட்டு சாலையில் பாறைகள் சரிவு

போடி

தமிழகம், கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடியில் இருந்து 26 கி.மீ. தூரம் கொண்ட இச் சாலை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் தினமும் தோட்டத் தொழிலாளர்களின் ஜீப்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

போடிமெட்டு மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. 4-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று காலை மண்ணின் பிடிப்புத்தன்மை குறைந்து திடீரென பாறைகள் சரிந்து சாலையின் நடுவே விழுந்தன. இதையடுத்து போடிமெட்டு மற்றும் முந்தல் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நெடுஞ்சாலைத் துறையினர் பாறைகளை அகற்றினர். இதனால் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x