Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
தமிழகத்தில் ஜன.16-ம் தேதி 307 இடங்களில் கரோனா தடுப்பூசி இடும் பணி நடைபெற உள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:
மத்திய அரசிடம் இருந்து 5 லட்சத்து 36 ஆயிரத்து 550 கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்துள்ளன. இவை, 10 மண்டல மையங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
பின்னர், அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டு ஜன.16-ம் தேதி 307 இடங்களில் பதிவு செய்யப்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி இடப்படும். இதேபோல, கோவாக்சின் தடுப்பூசிகள் 20,000 எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வரவுள்ளது. கரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. படிப்படியாக அனைவருக்கும் போடப்படும். தொடர்ந்து தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT