

இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறும்போது, "மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால், துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள் ளப்படும். எனவே, பாதிக்கப்படுவோர் புகார் அளிக்கலாம். கடந்த சில வாரத்துக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியது தெரியவந்ததும், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை பணியமர்த்திய நிறுவனமே அவரை பணிநீக்கம் செய்துள்ளது. லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வார்டுகள்தோறும் புகார் தெரிவிக்கும் எண்ணை குறிப்பிட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும்" என்றார்.