

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளை எந்த வாகனத்தையும் இயக்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. விதிமுறைய மீறி வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் எச்சரித்துள்ளார்.