Published : 12 Jan 2021 03:14 am

Updated : 12 Jan 2021 03:14 am

 

Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி வெற்றி

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

ஈரோடு

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் ஈரோடு நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.

ஈரோடு புன்செய்புளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாநில அளவிலான எழுவர் ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. இதில், நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் கொங்கு நேஷனல் ஹாக்கி கிளப் மாணவர்கள் உள்பட 8 அணிகள் கலந்து கொண்டன.


கால் இறுதிப் போட்டியில் ஈரோடு மொடக்குறிச்சி ஹாக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதிப் போட்டியில் எடப்பாடி ஹாக்கி அணியை 5-1 என்ற கோல் கணக்கிலும் கொங்கு நேஷனல் பள்ளி வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் கோவை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொங்கு நேஷனல் பள்ளி வெற்றி பெற்றது.

மேலும், கொங்கு நேஷனல் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்ததுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை, சுழற்கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் கே.செங்கோட்டுவேலவன், பள்ளி முதல்வர் கே.மைதிலி, உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.மனோஜ்குமார், எஸ்.புருஷோத்தமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

இன்றைய செய்தி

More From this Author

x