Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை: கோவில்பட்டியில் களைகட்டிய காய்கறிகள், கரும்புகள் விற்பனை

கோவில்பட்டியில் காய்கறிகள், கரும்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது.

கோவில்பட்டியின் சாலையோரங்களில் வியாபாரிகள் கரும்பு கட்டுகளை விற்பனைக்காக குவித்து வருகின்றனர். மதுரை மற்றும் மேலூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து கரும்புகள் கொண்டு வரப்படுகிறது. 15 எண்ணம் கொண்டு ஒரு கரும்பு கட்டு ரூ.350-க்குவிற்பனை செய்யப்படுகிறது.

தினசரி சந்தையில் காய்கறிகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இங்கு (ஒரு கிலோ) சின்ன வெங்காயம் - ரூ.80, பெரிய வெங்காயம் - ரூ.40முதல் ரூ.50 வரை, பட்ட அவரைக்காய் - ரூ.45, தக்காளி - ரூ.20, புடலைங்காய் - ரூ.25 முதல் 40, மாங்காய் - ரூ.60 முதல் ரூ.80 வரை, கத்தரிக்காய் - ரூ.60, முட்டைகோஸ் - ரூ.20, பூசணிக்காய் - ரூ.15 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் - ரூ.40 முதல் ரூ.50 வரையும், சிறுகிழங்கு - ரூ.20 முதல் ரூ.75 வரை, கேரட்- ரூ.30 முதல் ரூ.40 வரை, சவ்சவ் - ரூ.15, முள்ளங்கி - ரூ.25, தடியங்காய் - ரூ.10, இஞ்சி - ரூ.40, மல்லி -ரூ.40, முருங்கைக்காய் - ரூ.150, சேனைக்கிழங்கு - ரூ.25, கருணைக்கிழங்கு - ரூ.40, உருளைக்கிழங்கு - ரூ.30 முதல் ரூ.50 வரை, மொச்சை - ரூ.60, பச்சை பட்டாணி - ரூ.60, பட்டர் பீன்ஸ் - ரூ.150 முதல் ரூ.180 வரை, பீட் ரூட் - ரூ.20 முதல் ரூ.50 வரை, வெண்டைக்காய் - ரூ.30, மிளகாய் - ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டன. மேலும், புதினா ஒருகட்டு (அரைக்கிலோ) - ரூ.20, இலைக்கட்டு (5 எண்ணம்) - ரூ.30-க்கும் விற்பனையானது. இதே போல், மஞ்சள் குலை - ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. பனங்கிழங்கு 10 எண்ணம் கொண்டு ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது.

தேவைக்கு ஏற்ப காய்கறிகள் வந்தாலும் விலை அதிகமாகவே காணப்படுகிறது. இன்னும் 2 நாட்கள் வியாபாரம் உள்ளது. இதனால் விலையில் மாற்றங்கள் வரலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் வைக்கும் வெண்கல பானை (உருளி) எடையை பொருத்து ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை விற்கப்பட்டது. தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமணத்தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சீர்வரிசை பொருட்கள் வாங்குவதில் மும்முரமாக இருந்தனர். கரும்புக்கட்டு, பொங்கல் பானைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கார், ஆட்டோ, சுமை ஆட்டோ உள்ளிட்டவற்றில் கொண்டு சென்றனர். பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளதால் கோவில்பட்டி பஜார், மார்க்கெட், புதுரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x