கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 100-வது பேரவை கூட்டம்

கடலூர் மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கியின் 100-வது பேரவை கூட்டம்
Updated on
1 min read

கடலூரில், மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கியின் 100-வது சிறப்பு பொதுப்பேரவை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

கடலூர் மண்டல கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் நந்தகு மார் தலைமை தாங்கினார். கட லூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி முன்னிலை வகித் தார். வங்கியின் முதன்மை வரு வாய் அலுவலர் ராஜேந்திரன் வர வேற்று பேசினார்.

மத்திய வங்கியின் பொது மேலாளர்(பொறுப்பு) பலராமன் தீர்மானங்களை வாசித்தார். சிறந்த கிளைகளுக்கான கிளை மேலாளர்கள், சிறந்த கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர்கள் கவுர விக்கப்பட்டனர்.

சரக துணைப் பதிவாளர்கள் கடலூர் சண்முகம், விருத்தாசலம் ஜீவானந்தம், சிதம்பரம் துரைசாமி, பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளர் ஜெகத்ரட்சகன், விருத் தாசலம் நகர வங்கியின் மேலாண் இயக்குனர் யோகவிஷ்ணு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக்குழு தலைவர்கள் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர். வங்கி யின் உதவிப் பொது மேலாளர் மலர்விழி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in