திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்

திருப்பத்தூரில் மாட்டுவண்டி பந்தயம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதுக்காட்டாம்பூரில் திமுக சார்பில் நடந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை கே.ஆர்.பெரிய கருப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல் முன்னிலை வகித்தார்.

பெரிய மாடுகள் பிரிவில் 16 வண்டிகள் பங்கேற்றன. இதில் திருப்பத்தூர் ராஜேஷ்கண்ணா வண்டி முதலிடம், சிவகங்கை அருண் ஸ்டூடியோ வண்டி இரண்டா மிடம், பல்லவராயன்பட்டி வண்டி மூன்றாமிடம், அம்மன்பேட்டை ராஜேஸ்வரி வண்டி நான்காமிடம் பெற்றன. சின்னமாடுகள் பிரிவில் 38 வண்டிகள் பங்கேற்றன. இதனால் இரண்டு பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தன. முதல் பிரிவில் தஞ்சை திருப்பண்துறுத்தி வண்டி முதலிடம், கண்ணக்கன்பட்டி சர்குரு வண்டி இரண்டாமிடம், குண்டேந்தல்பட்டி பவதாரணி வண்டி மூன்றாமிடம், பாதரக்குடி வளர்மதி வண்டி நான்காமிடம் பிடித்தன.

மற்றொரு பிரிவில் திருப்பத்தூர் ராஜேஷ்கண்ணா வண்டி முதலிடம், கள்ளந்தரி நகுலன்சேதுபதி வண்டி இரண்டாமிடம், விராமதி சந்திரன் வண்டி மூன்றாமிடம், பூக்கொல்லை நிதிஷ்குமார் வண்டி நான்காமிடம் பிடித்தன. வென்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் ரவி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கம், மாணவரணி கதிர்ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்டப் பிரதிநிதி தங்கமணி, முன்னாள் பிரதிநிதி கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in