குறிஞ்சிப்பாடி பகுதியில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரங்கமங்கலம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரங்கமங்கலம் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டஅரங்கமங்கலம், அயன்குறிஞ்சிப் பாடி, பெரியகண்ணாடி, காயல் பட்டு ஆகிய ஊராட்சிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் நாரா யணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மின்சார வாரிய தொமுச மாநில துணை தலைவர் வேல்முருகன், குறிஞ்சிப்பாடி பேரூர் திமுக அவைத் தலைவர் ராமர்,விவசாய அணி அன்பழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிள், பெண்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in