தானிய பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு பிரச்சாரம்
தானியப் பயிர்களை பயிரிடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தொடங்கிவைத்தார்.
தானியப் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் இரா.கண்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் 16 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் 13 பிரச்சார வாகனங்கள் மூலம் இப்பணிகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
