

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குநரும், திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்பார்வையாளருமான மு.கருணாகரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அவர் பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11 லட்சத்து 42775 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 60 809 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 258 பேரும் உள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கடந்த 1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்த மனுக்களின் மீது, முறையான ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்காளர்கள் இணையதளம் மூலமாகவும், வாக்காளர் பட்டிய லில் உள்ள தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். எந்தவொரு தகுதியான வாக்காளரின் பதிவும் விடுபடக்கூடாது. தகுதியற்றவாக்காளரின் பதிவும் பட்டியல்களில் இடம்பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற வேண்டும்" என்றார்.
இதுவரை பெயர் சேர்த்தல், நீக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 1 லட்சத்து 12,275 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. வருவாய் அலுவலர் கு.சரவண மூர்த்தி, தாராபுரம் சார் ஆட்சியர் பவண்குமார் உட்பட பலர் பங்கேற் றனர்.
இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.