வீடூர் அணை பாசனத்திற்காக திறப்பு அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

வீடூர் அணையில் விவசாய பாசனத்திற்கான நீரை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து மலர் தூவினார். அருகில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர்.
வீடூர் அணையில் விவசாய பாசனத்திற்கான நீரை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்து மலர் தூவினார். அருகில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திண்டிவனம் அருகே வீடுர் கிராமத் தில் உள்ள வீடூர் அணை கடந்த டிசம் பர் 5-ம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீடூர் அணையிலி ருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கதமிழக அரசு ஆணையிட்டது. அதன் படி அமைச்சர் சி.வி.சண்முகம் பாசனத்திற்காக, விநாடிக்கு 54 கன அடி தண்ணீரை திறந்து வைத்தார். வரும் மே 22- ம் தேதி வரை135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டில் 2,200 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் ஆக மொத்தம் 3,200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங், திண்டிவனம் ஆட்சியர் அனு, எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவகர், உதவிசெயற்பொறியாளர்கள் சுமதி, ஞானசேகரன், செல்வி, அய்யப்பன், கனக ராஜ், கார்த்திக், பிரசன்னா, மாநில தணிக்கை கண்காணிப்பாளர் வடி வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மே 22- ம் தேதி வரை135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in