கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் 45 சதவீதம் நிறைவு சுகாதாரத்துறை இணை செயலாளர் தகவல்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகள் 45 சதவீதம் நிறைவு சுகாதாரத்துறை இணை செயலாளர் தகவல்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளர் எஸ். நடராஜன் ஆய்வுசெய்தார். அப்போது அவர் கூறியதாவது:

போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ரூ.120.20 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டிடம், ரூ.113.77 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டிடம் மற்றும் ரூ.104.98 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம் என மொத்தம் ரூ.338.95 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது

அதன்படி ஒரு மருத்துவமனைக் கட்டிடம், 6 கல்லூரி கட்டிடங்கள், 12 குடியிருப்பு கட்டிடங்கள் என மொத்தம் 19 கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும், கல்லூரி முதல்வர், மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், மாணவ, மாணவிகள் விடுதி, அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கான குடியி ருப்பு கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மா வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் குழுவினருடன் இணை செயலாளர் நடராஜன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின் போது ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் கோவிந்தன், கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், உதவி செயற்பொறியாளர் மகாவிஷ்ணு, உதவி பொறியாளர்கள் பழனிசாமி, கீதா, திட்ட மேலாளர் மாணிக்கம் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in