Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நுரையீரலில் நிலக்கடலை சிக்கி உயிருக்குப் போராடிய 2 வயது குழந்தை 2 மணி நேரம் போராடி அகற்றிய மருத்துவர்கள்

2 வயது குழந்தையின் நுரையீர லில் நிலக்கடலை சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமரு கலை அடுத்த பெரியகண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண், ஓவியர். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது மகள் அனுமித்ரா(2). கடந்த 6-ம் தேதி அனுமித்ரா நிலக்கடலை சாப்பிட்டபோது, உணவுக்குழாயில் நிலக்கடலை சிக்கிக்கொண்டு, மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனடியாக, அவரை திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கிருந்து, நாகை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுமித்ரா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அனுமித்ராவுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து, உயிருக்கு ஆபத் தான நிலையில் இருந்ததால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டார். அங்கு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ச.மருததுரை, மருத்துவமனை நிலைய அலுவலர் ஏ.செல்வம் மற்றும் காது, மூக்கு தொண்டை மருத்துவர் ராஜ்கமல், மயக்கவியல் மருத்துவர் மாலினி, குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அனுமித்ராவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, உணவுக் குழாயிலிருந்து நிலக்கடலை நகர்ந்து நுரையீரலின் வலது பக்கத்தில் 3 துண்டுகளாக சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரிஜட்பிராங்கோஸ் ஸ்கோபி என்ற சிறப்பு கருவி மூலம் மருத்துவர்கள் 2 மணி நேரம் போராடி நிலக்கடலையை வெளியே எடுத்தனர்.

தற்போது, மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை அனுமித்ரா நலமாக உள்ளார். குழந்தையை காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு குழந்தையின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x