Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 46 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,961-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,510-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,499-ஆக அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு நேற்று 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x