

தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடியாக உயர்ந்துள்ளது.
தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், தி.மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1,331 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3,541 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடியாக உயர்ந்துள் ளது. நேற்று முன்தினம் காலை 101.95 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 103.90 அடியாக (மொத்த உயரம் 119 அடி யாகும்) உயர்ந்தது. அணையில் 4,355 மில் லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
அணை பகுதியில் 6.30 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தென் பெண் ணையாற்றின் கரையோரங்களில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக் கையுடன் இருக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
60 அடி உயரம் உள்ள குப்ப நத்தம் அணையின் நீர்மட்டம் 46.90 அடியாக உள்ளது. அணையில் 421.80 மில்லியன் கனஅடி தண்ணீர்உள்ளது. அணைக்கு விநாடிக்கு 76.38 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை பகுதியில் 4.30 மி.மீ., மழைபெய்துள்ளது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 13.34 அடியாக உள்ளது. அணையில் 5 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக 35 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணை பகுதியில் 2 மி.மீ., மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 58 அடியாக, கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.