குறிஞ்சிப்பாடியில் புதிய நெல் ரகம் சாகுபடி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆய்வு

அயன்குறிஞ்சிப்பாடியில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் புதிய ரக நெல் பயிரிட்டுள்ள வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அயன்குறிஞ்சிப்பாடியில் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் புதிய ரக நெல் பயிரிட்டுள்ள வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Updated on
1 min read

அயன்குறிஞ்சிப்பாடி விவசாயிக ளுக்கு புதிய ரகமான ஆடுதுறை 53 மற்றும் 54 ரகவீரிய நெல் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக வழங்கப்பட்டது. புதிய ரக நெல்கள் பயிரிடப்பட்டிருந்த வயல்களை நேற்று ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கர், நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சசிகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

விருத்தாசலம் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம், பேராசிரியர்கள் பாஸ்கரன், மருதாச்சலம், நடராஜன்,குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் அனுசுயா ஆகியோர் உடனிருந்தனர்.

வயலை பார்வையிட்ட பின்விவசாயிகள் மத்தியில் ஆடுதுறைநெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்அம்பேத்கர் பேசுகையில், "ஆடு துறை நெல் ஆராய்ச்சி நிலையம் பூச்சிநோய் தாக்காத அதிக விளைச்சல் தரக்கூடிய பல புதியரகங்கள் வருடம் தோறும் வெளி யிட்டு வருகிறது. அதனை பயிரிட்டு விவசாயிகள் அதிகம் லாபம் பெற வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in