பாமக சார்பில் மனு அளிக்கும் போராட்டம்
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னி யர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சாதியினருக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வன்னியர் சங்கம் மற்றும் பாமகவி னர் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் ரயிலடியி லிருந்து பாமக முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.ஏ.அய்யப்பன் தலைமையில் நேற்று ஊர்வலமாக சென்று, மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதேபோல, கும்பகோணம் நகராட்சி அலுவலகத் தில் பாமக மாநில துணைச் செய லாளர் கே.ஆர்.வெங்கட்ராமன் தலைமையிலும், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையிலும் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை அம்பேத்கர் சிலையிலிருந்து பாமக மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணிய ஐயர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று, நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி அலு வலகத்தை பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பா.தர், மாவட்டச் செயலாளர் பி.கே.திலீப்குமார் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் க.வைத்தி தலைமையில், மேற்கு வட்டாட்சியர் அலுவ லகத்தில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், முக்கிய நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்று மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அரியலூரில் நகராட்சி அலுவலகம் எதிரே பாமக மாநில துணைத் தலைவர் சின்னத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, நகராட்சி ஆணை யரிடம் மனு அளிக்கப்பட்டது. பெரம்பலூரில் பாமக மாவட்டச் செய லாளர் ராஜேந்திரன் தலைமையில் பேரணியாக சென்று, நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் குமரிமன்னனிடம் மனு அளிக்கப் பட்டது. கரூரில் இருசக்கர வாகனங்களில் பேரணியாக புறப்பட்டுச் சென்று, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில், கரூர் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நாகை நகராட்சி அலுவலகம் முன்பு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வேத.முகுந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, நகராட்சி ஆணையர் ஏகராஜிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
