ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Updated on
1 min read

திருப்பூர் சிறுபூலுவபட்டி 15-வேலம் பாளையம் சாலையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. இங்கு பணிகளை மேற்கொள்ளலஞ்சப் பணம் கைமாற்றப்படுவதாக, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் துணைகண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கவுசல்யா உள்ளிட்டோர் அடங்கிய போலீஸார், நேற்று மாலை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் குமார் உள்ளிட்டோரும் உள்ளே இருந்ததாக தெரிகிறது. நேற்று மாலை தொடங்கிய சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. சோதனை முடிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in