பட்டியல் அணி மாநாடு விழுப்புரத்தில் பாஜக ஆலோசனை

பாஜக பட்டியல் அணி மாநாடு குறித்து விழுப்புரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாஜக பட்டியல் அணி மாநாடு குறித்து விழுப்புரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் பட்டியல் அணி மாநாடு நடத்துவது குறித்து பட்டியல் அணி சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பட்டியல் அணி தலைவர் ஏழுமலை தலைமையேற்றார். மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் (பட்டியல் அணி) ரகு வர வேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் பட்டியல் அணி நிர்வாகி பொன். பாலகணபதி, மாநில பொதுச் செயலாளர் ராகவன் மற்றும் பாஜக இனை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் மாநில செயற் குழு உறுப்பினர் சிவ. தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டியல் அணித் தலைவர் சக்தி வேல், விழுப்புரம் நகரத் தலைவர் ஜெயசங்கர், ஊடக பிரிவின் விழுப்புரம் மாவட்ட தலைவர் தாஸசத்யன் மற்றும் மாவட்ட பட்டியல் அணி பொருளாளர் திருநாவுக்கரசு, செயலாளர்கள் ராமமூர்த்தி, சொளந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் சாதாசிவம் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in