

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் அரங்க.குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, பெரியார் மய்யம், தாளாண்மை உழவர் இயக்கம், ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம், சிபிஎம்.எல். மக்கள் விடுதலை, ஏஐடியுசி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.