

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி(35). இவர் மீது பட்டுக்கோட்டை பகுதி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை பட்டுக்கோட்டை பெரிய கடைத் தெரு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிரஞ்சீவியை ஒரு கும்பல் வழிமறித்து, அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, தப்பியோடிவிட்டது. தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை போலீஸார், சிரஞ்சீவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் என்ன, கொலை செய்தது யார் என்பன தொடர்பாக, போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.