‘யானை வழித்தட ஆட்சேபனையை பிப்ரவரி 14-க்குள் தெரிவிக்கலாம்’

‘யானை வழித்தட ஆட்சேபனையை பிப்ரவரி 14-க்குள் தெரிவிக்கலாம்’
Updated on
1 min read

சீகூர் சமவெளியில் யானைகள்வழித்தடத்தால் பாதிப்புக்குள்ளாகி, ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர், உரிய ஆவணங்களுடன் பிப்ரவரி மாதம் 14-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட யானைகள் வழித்தட விசாரணைக்குழு தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமானகே.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘யானைகள் வழித்தட விசாரணைக்குழு அலுவலகம் வனவியல் விரிவாக்க அலுவலகக் கட்டிடம், ஜிம்கானா கிளப் சாலை, ஃபிங்கர் போஸ்ட், உதகை என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.

யானைகள் வழித்தடம் குறித்து பாதிப்புக்குள்ளாகி, ஆட்சேபனை செய்ய உள்ளவர்கள், தங்கள் பாதிப்புகளையும் அதன் விவரங்களையும், ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நான்கு நகல்களை இணைத்து, ஆங்கில மொழிபெயர்ப்புடன், பொருளடக்கத்துடன் ஸ்கேன் செய்யப்பட்ட மென் நகல்களுடன், அசல் பிரமாண பத்திரம் ஒன்றும்மற்றும் அதன் மூன்று நகல்களுடன் அனைத்து அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதிக்குள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in