ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் கிருஷ்ணகிரியில் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் என்ற புதிய உணவக திறப்பு விழாவில், உணவக உரிமையாளர்கள் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், முகமது ஷபீர் ஆகியோர்  மெனு கார்டை வெளியிட்டனர்.
கிருஷ்ணகிரியில் ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் என்ற புதிய உணவக திறப்பு விழாவில், உணவக உரிமையாளர்கள் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், முகமது ஷபீர் ஆகியோர் மெனு கார்டை வெளியிட்டனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் என்ற புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் டான்சி வளாகத்தில் ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் பேம்லி தாபா என்ற புதிய உணவக திறப்பு விழா நடந்தது. விழாவில், உணவகத்தின் உரிமையாளர்கள் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப், முகமது ஷபீர் ஆகியோர் உணவு விவர பட்டியல் அடங்கிய மெனு கார்டை வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கூறியது:

எங்கள் ஜே.கே.கார்டன் ரெஸ்டாரன்ட் பேம்லி தாபா உணவகம், குடும்பத்தினர் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள், திருமண வரவேற்பு, திருமண நாள் போன்ற சிறிய அளவிலான குடும்ப விழாக்களை நடத்த எங்கள் உணவக வளாகத்தில் இட வசதி உள்ளது. மேலும், குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் இருக்கைகள், பொம்மைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

இங்கு, அனைத்து சைனீஸ் உணவு வகைகள், பார்பிக்யூ, கிரில் சிக்கன், தந்தூரி சிக்கன், ஷவருமா, ரோல் சிக்கன் உள்ளிட்ட எண்ணற்ற, சுவை மிக்க உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. தினமும் பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரை எங்கள் உணவகம் இயங்கும். ஆர்டரின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. இதுதவிர, ஆர்டரின் பெயரில் பிரியாணி செய்து வழங்கும் வசதியும் உள்ளது.

இவ்வாறு கூறினர். இந்நிகழ்ச் சியில், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், கராமத், ஜாமீர், ஆசிரியர் கோவிந்தன், யாயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in