

தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்தவர் விஜய் மனைவி ரூபிகிரேசி(30). இவர், தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி சின்ன மருத்துவமனை அருகே நேற்று கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது, தஞ்சை கிழக்கு போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் கருவாழக்கரையில் நடத்திய வாகன சோதனையின்போது, இருசக்கர வாகனத்தில் அரை கிலோ கஞ்சா கொண்டு வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.