

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சுகதேவ் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வரதராஜ், மாநிலப் பொருளாளர் சாமிவேல், மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரேம்குமார் ஆகியோர் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை 24 மணி நேரம் இயக்குவதற்குப் பதிலாக 12 மணி நேரம் மட்டும் இயக்கி 100 தொழிலாளர்களின் ஊதியத்தைக் கையாடல் செய்கின்றனர். அதேபோல், ஒரே ஓட்டுநரையும் மருத்துவ உதவியாளரையும் 2 ஆம்புலன்ஸ்களில் பணிபுரிய வைத்து ஊதியத்தைக் கையாடல் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.