

தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்து நகர் பெரிய மாதா கோயில் தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி பூபால்ராயர் மகன் கிளின்டன் (25). இவர் நேற்று முன்தினம் இரவு தாளமுத்துநகர் வடக்கு கடற்கரை பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தாளமுத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். மேலும் குற்றவாளிகளைக் கைது செய்யதூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ்மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
விசாரணையில், கிளின்டன் தனது நண்பர்களான, சாமுவேல்புரம் மகேஷ்குமார் மகன் டேனியல்ராஜ் (20), பூபால் ராயர்புரம் அண்டன் கோமஸ் மகன் அந்தோணிராஜ் (22), தூத்துக்குடி மாதாகோயில் தெருவைச் சேர்ந்த ஜேசு ரேவாதுரை மகன் சந்தனராஜ் (40) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவுமது அருந்தியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில்பீர் பாட்டிலால் தாக்கி கிளின்டன்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. டேனியல்ராஜ், அந்தோணிராஜ், சந்தனராஜ் ஆகிய மூவரையும் தாளமுத்து நகர் போலீஸார் கைது செய்தனர்.