நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1.76 லட்சம் வழக்குகள் பதிவு காவல் கண்காணிப்பாளர் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1.76 லட்சம் வழக்குகள் பதிவு காவல் கண்காணிப்பாளர் தகவல்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விதிமீறல் உட்பட 1.76 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3.57 கோடிஅபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.சசிமோகன் கூறியதாவது:

கடந்த 2020-ம் ஆண்டு மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகளில் 14 பேர் உயிரிழந்தனர், 16, 203காயமடைந்துள்ளனர். சாலைவிதிமீறல் உட்பட 50 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது 1.11 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போதையில் வாகனம் ஓட்டியதாக 821, அதிவேகமாக வாகனம் இயக்கியதாக 5 ஆயிரம், கைப்பேசிஉபயோகித்து வாகனம் இயக்கியதாக 10 ஆயிரம், இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கியதாக 50 ஆயிரம் என மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 821 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் வாயிலாக, ரூ.3.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை தாக்கலான 7 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாலியல் குற்றவழக்குகளில் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.மாவட்டம் முழுவதும் 1,160 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகிறது. பர்லியாறு, குஞ்சப்பனை, கக்கனல்லா, பாட்டவயல், நாடுகாணி ஆகிய 5 சோதனைச் சாவடிகளில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in