

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரசாக் மனைவி ஹபிபா பீவி(62). வீட்டில் தனியாக வசித்து வந்தார். தவணை முறையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், அருகில் வசிப்பவர்கள் ஹபிபா பீவியின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது ஹபிபா பீவி முகம் சிதைக்கப்பட்டு, ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸார் அங்குசென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஹபிபா பீவியை கொலை செய்தது யார், காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.