தூத்துக்குடி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

புத்தாண்டை முன்னிட்டு   தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களை ஆர்வமுடன் வாங்கிய பெண்கள். 					           படம்: என்.ராஜேஷ்
புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் ரோஜா பூக்களை ஆர்வமுடன் வாங்கிய பெண்கள். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடிபூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலைகடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைரூ. 3,000க்கு விற்பனையானது. பிச்சிப்பூ கிலோ ரூ. 2,000-க்கும், கலர் பிச்சிப்பூ கிலோ ரூ.1,500-க்கும் விற்பனையானது.

ரோஜா விலையும் நேற்று கடுமையாக உயர்திருந்தது. நேற்று முன்தினம் வரை ஒரு ரோஜா பூ ரூ.10-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. 20 பூக்களை கொண்ட ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனையானது. ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து ரோஜா பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

சிவந்தி கிலோ ரூ.200, அரளி ரூ.300, செண்டு ரூ.60, கோழிக் கொண்டை ரூ.80, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினத்தை விட நேற்று இரு மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து மிகவும் குறைந்ததே இதற்கு காரணம் என பூ வியாபாரி செல்வராஜ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in