பல்வேறு குற்றச்சாட்டுகளால் கலைக்கப்பட்ட வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் 5 ஆண்டுகள் வரவு-செலவு கணக்குகள் தணிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்'  கோட்டாட்சியர் கணேஷ் முன்னிலையில் நேற்று அகற்றப்பட்டது.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்' கோட்டாட்சியர் கணேஷ் முன்னிலையில் நேற்று அகற்றப்பட்டது.
Updated on
1 min read

வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துக்கு வருவாய் கோட் டாட்சியர் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, அலுவலக கட்டிடத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றி யதுடன், கடந்த 5 ஆண்டுகளின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்யவும் ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நிதி தணிக்கைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிதி முறைகேடு தொடர்பான புகார்கள் மற்றும் சங்கத்தின் செயலாளர் இந்தர்நாத்தின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

இதையடுத்து, செஞ்சிலுவை சங்க நிர்வாகக் குழுவை கலைத்து உத்தரவிட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், சங்கத்தின் கட்டிடங்களுக்கு ‘சீல்' வைக்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலைமையில் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்க அலுவல கத்துக்கு ‘சீல்’ வைத்தனர். வேலூர் சத்துவாச் சாரியில் உள்ள கிளினிக் மற்றும் பொய்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆய்வு நடத்தி நிர்வாகம் தொடர்புடைய பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்தர்நாத் பொறுப் பாளராக இருந்த ‘கில்டு ஆப் சர்வீஸ்’ (சேவா சமாஜம்) கலைக் கப்பட்டு வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் உள்ள அதன் அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதன் கட்டுப் பாட்டில் காகிதபட்டரை பகுதியில் இருந்த பெண்கள் தங்கும் விடுதியும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தில் நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய நிர்வாகிகள் நியமனம்

புதிய நிர்வாகிகள் நிய மனத்தைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் முன்னிலையில் செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு வைக் கப்பட்ட ‘சீல்’ நேற்று அகற்றப் பட்டது. செஞ்சிலுவை சங்கத்தின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப் பட்டது.

வரவு-செலவு கணக்கு தணிக்கை

செஞ்சிலுவை சங்கத்துக்கு தற்போது வரை 4, 5 வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இதை மாற்றி ஒரே வங்கிக் கணக்காக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளின் வரவு-செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in