Regional02
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக அரியலூர் மாவட்டத்தில் இன்று (டிச.31) இரவு நடத்தப்படும் 2021 ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி யில்லை. மேலும், அதிவேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கிக்கொண்டு வீதிகளில் அதிக சப்தத்துடன் ஊர்வலமாக செல்லுதல், பொது இடங்களில் அதிகமான நபர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டமாக கூடுதல், கேளிக்கையாக வாண வேடிக்கை மற்றும் பட்டாசுகளை பொது இடங்களில் வெடித்தல், அதிக சப்தத்துடன் கூடிய பாடல் மற்றும் இசையை ஒலிக்கச்செய்தல் போன்றவற்றுக்கும் அனுமதியில்லை
என ஆட்சியர் த.ரத்னா தெரிவித் துள்ளார்.
