

தேசிய சித்த மருத்துவ தினத்தை யொட்டி புதுக்கோட்டை சித்த மருத்துவமனையில் இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமுக்கு ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமை வகித்து பேசியபோது, “மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் ஏராளமானோர் குணமடைந் துள்ளனர். பொதுமக்கள் சித்த மருத்துவத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். பாரம்பரிய உணவுகளை உட் கொள்ளலாம்” என்றார்.மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கஜீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.