நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கருங்குளம் வட்டாரத்தில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவுப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெற்பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. இப்பயிர்களில் இலைகள் நீள்வாக்கில் மடிந்து, வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் காய்ந்தது போல் காட்சி அளிக்கும்.

இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளை மேற்கொள்ள வேண்டும். வயலில் விளக்குப்பொறி வைத்து, தாய் அந்துப்பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும். வயல் வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை, ஏக்கருக்கு 2 சி.சி. என்ற அளவில் வயலில் ஆங்காங்கே கட்டலாம். வேம்பு பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் 1 சதவீத கரைசலை 40 மி.லி. என்ற அளவில் 10 லிட்டர்தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பூச்சித்தாக்குதல் அதிகமானால், குளோரான் ட்ரானிலிப்பரோல் 6 மி.லி. அல்லது தையோமீத்தாக்சோம் 4 மி.லி. அல்லது இமிடோகுளார்பிரிட் 6 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை,10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in