பிஏபி கிளை வாய்க்கால் கரையில் உடைப்பு தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் புகார்

உடுமலை அருகே தாந்தோணி - துங்காவி சாலையில் வழிந்து செல்லும் பிஏபி பாசன நீர். படம்: எம்.நாகராஜன்
உடுமலை அருகே தாந்தோணி - துங்காவி சாலையில் வழிந்து செல்லும் பிஏபி பாசன நீர். படம்: எம்.நாகராஜன்
Updated on
1 min read

உடுமலை அடுத்துள்ள தாந்தோணி பகுதியில் கடந்த சில நாட்களாக பிஏபி வாய்க்கால் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. அதேபோல யுகேபி நகரில் தொடங்கி சின்னவீரம்பட்டி நோக்கி செல்லும் சிறு வாய்க்காலில் பல இடங்களில் கரை உடைந்து காலி மனை இடங்களில் தண்ணீர் தேங்கி வீணாகி வருகிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பிஏபி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி விஜயசேகரன் கூறும்போது, ‘‘பிஏபி வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொண்டு, அரசு ஊழியர்கள் மறைமுகமாக பணம் சம்பாதிக்கின்றனர். இதுகுறித்து அரசுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘‘போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பராமரிப்புப் பணிகள் செய்ய முடிவதில்லை. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in