வள்ளலார் அருள் மாளிகை சார்பில் விழுப்புரத்தில் நாளை இலவச சித்த மருத்துவ முகாம்

வள்ளலார் அருள் மாளிகை சார்பில் விழுப்புரத்தில் நாளை  இலவச சித்த மருத்துவ முகாம்
Updated on
1 min read

விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் நாளை இல வச சித்த மருத்துவ முகாம் நடை பெறுகிறது.

விழுப்புரம் அருள் மாளிகை மேனேஜிங் டிரஸ்டி ஜெய அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை வளாகத்தில் நாளை (டிச.31) காலை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 வரை வள்ளலார் அருள்மாளிகை சன்மார்க்க அன்பர்கள் மாவட்ட சித்த மருத்துவ மனையுடன் இணைந்து இலவசசித்தமருத்துவ முகாம் நடத்துகி றோம்.

இம்முகாமில் காய்ச்சல், மார்புசளி, தோல் நோய்கள் மற்றும்பொதுவான உடல்நல குறைவு கள், பெண்கள், குழந்தைகள் நோய்களுக்கு சித்த மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்க உள்ளனர்.

இந்த சித்த மருத்துவ முகாமைபொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றோம். மேலும் ஆங்கிலப் புத்தாண்டான நாளை மறுநாள் (ஜன. 1)ஆதரவற்ற தெருவாசிகளுக்கு வள்ளலார் அருள் மாளிகை சார்பில் ஆயிரம் நபர்களுக்கு இலவச போர்வை வழங்கும் நிகழ்ச்சி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றும் நாளையும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே போர்வை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 99948 56314, 97895 48600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in