

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சொந்தமாக இரும்புக் கடை நடத்தி வருகிறார். கணேசன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.