

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ரூ. 4 லட்சம் முறைகேடு தொடர்பாக வங்கிச் செயலரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பேராவூரணி அருகே உள்ள மாவடுக்குறிச்சி கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் செயலராக பட்டுக்கோட்டை அருகே உள்ள பாதரசங்கோட்டை அனந்த கோபாலபுரத்தைச் சேர்ந்த முருகே சன்(49) பணியாற்றி வருகிறார்.
இவர், தனது பணிக்காலத்தில் 1.4.2017 முதல் 31.7.2018 வரை பொதுமக்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்குரிய ரூ.4 லட்சத்தை முறைகேடாக சொந்தச் செலவுக்கு எடுத்து பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பட்டுக்கோட்டை கூட்டுறவு துணைப் பதிவாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் நடத்திய விசார ணையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வு போலீஸில் ஜெயபாலன் புகார் அளித்தார். அதன்பேரில், வணிகக் குற்றப் புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகேசனை நேற்று கைது செய்தனர்.