பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
திருப்பூர் அரிசிக்கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

பாதாள சாக்கடை மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிளைச் செயலாளர் முருகசாமி தலைமை வகித்தார். சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன. கடை வீதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பழைய மார்க்கெட் சாலையானது, மாநகராட்சி பணிகளால் அடைக்கப் பட்டுள்ளது.

இதனால், அரிசிக் கடை வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அரிசிக்கடை வீதியிலும் பணிகள் நடைபெறுகின்றன.

புது மார்க்கெட் வீதியிலும் சாக்கடை பணிகள் நடைபெறு கின்றன.

போக்குவரத்து நெரிசலைபோக்க, மேற்கண்ட பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைந்துமுடிக்க வேண்டும்.

ஏற்கெனவே சிதில மடைந்துள்ள சாலைகளையும் விரைந்து சீரமைக்க வேண்டுமென வலியுறுத் தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in