

உதகையில் ஜாக்கி நழுவி லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சந்திரன் (65). கோடப்பமந்து கால்வாய் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர், நேற்று கால்வாயிலிருந்து கழிவுகளை எடுத்துக் கொட்ட லாரியில் அப்பகுதிக்கு சென்றார். அப்போது, டயர் பஞ்சரானதால், ஜாக்கி மூலமாக மாற்று டயரை மாற்றிக் கொண்டிருந்தார். திடீரென ஜாக்கி நழுவியதால், துரதிருஷ்டவசமாக சந்திரன் லாரியில் சிக்கி உயிரிழந்தார். உதகை பி1 போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.